Pages

Sunday, May 10, 2009

தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்




துள்ளி திரிந்த காலங்களில்
அள்ளி அணைத்து முத்தமிட்டாய்
பள்ளி சென்ற காலங்களில்
கல்வியும் நீயே தந்தாய்
எனக்காக அன்பு தந்தாய்
அதற்காக எதையும் செய்தாய்.

காய்ச்சலும் மருந்துகளும் எனக்கு
வலிகளையோ நீ சுமந்தாய்
கோபத்திலும் பாசம் தந்தாய்
ரசம் என்னும் அமிர்தம் தந்தாய்
பசியை மறந்த இரவுகளிலும்
கனவில் வந்து எழுப்பி விட்டாய்

நில்லாத புகழும்
செல்லாத செல்வமும்
காணாத சொர்கமும்
இல்லாத தெய்வங்களும்
இனி எனக்கு தேவை இல்லை
கண்முன்னே நீ இருக்க ....

Happy Mother's Day

No comments:

Post a Comment