இலையுதிர் காலம் என்றால்
என்ன என்று தெரியாத காடு அது
யார் அதனை சாபமிட்டு சோகங்களின்
வீடு என மாற்றியது?
அங்கே ஒரு இளவரசி ...
பூக்கள் வந்து அவளிடம் பேசும்
யானை மேலே ஏறி...
காட்டை ஏலம் கேட்டாள்
மரத்தில் ஏறி பூக்கள் பறித்தாள்
மின்சாரம் தொலையும் இரவினிலே
தன் காதலை சொல்லும் தெருவிளக்கு
நீ இமைகள் மூடும் இடைவெளி தான்
என் காதல் சொல்வதற்கு
வெயிலோடு மழை வரும் நாட்களிலே
சில பூக்கள் பூக்கிறதே
அந்த காட்டு பூவுக்கு இன்று
உன் பெயரை சூட்டி விட்டேன் அன்பே
காதல் இதுதானா
உலகெல்லாம் சுகங்கள் பொது தானா
மனசுக்குள் அணில் பிள்ளை போலே
தவழ்வதும் அது தானா!!
வலிக்கின்ற போதும்
சிரிக்கின்றேன் நானும்
உனக்காக...
நானும் தேய்கிறேன்
No comments:
Post a Comment