குறிஞ்சி மலராய் வருகை தந்தாய்
நெருஞ்சி முள்ளாய் பிரிவு தந்தாய்
நீ தீயில் விழுந்த தேனா?
இல்லை தீயை தின்ற சீதையா?
என்னை மாற்றி வெற்றிகள் தந்தாய்
உனக்கே என்று இதயமும் பறித்தாய்
நீ கடலில் கலந்த அமுதா?
இல்லை மதுவில் கலந்த விஷமா?
நினைவிலே விழியிலே வலிகளே என்றாலும்
ஒருபோதும் நீயும் கலங்கிட வேண்டாம்
என்றும் நல்லோர்கள் உன்னை சூழ
சுபமுடன் பல்லாண்டு நீ வாழ்க :)
No comments:
Post a Comment