….காதலர்களாம் :)
மேகம் வளைத்து
குடைகள் செய்வார்
வானவில் ஏறி
மின்னலை பிடிப்பார்
நிலவை பிடித்தே
மிதியடி அமைப்பார்
விண்மீன்கள் கொண்டே
கோலங்கள் வரைவார்
இவை அனைத்தும்
காதலியின் ஒற்றை
பார்வையில் மட்டுமே
சாத்தியம் என்பார்!!
வார்த்தைகள் வைத்து
ஜாலங்கள் செய்வார்
கவிதைகள் கிறுக்கி
காதலை சொல்வார்
நண்பர்களை மறப்பார்,
தனிமையில் சிரிப்பார்
கற்பனையில் மிதப்பார்
நிஜத்தினில் பறப்பார்
இப்படி இல்லாத
உலகம் சென்று
பொய்யான வாழ்க்கையில்
காலத்தை வீணடிக்கும்
Mental galukku பெயர்….
“Every Unconditional love has an Unforgivable Stupidity in it”
No comments:
Post a Comment