நீ வரும் தெருவில்
மேகம் மழையாய் பொழியும்
உன் விரல் மோதி
மழை துளி தேனாகும்
உனக்காக காத்திருந்து
பூக்கள் உதிரும்
உன் பாதம் படவே
அவை விரதம் இருக்கும்
உன் முகம் காண
சூரியன் உதிக்கும்
உன் அழகு கண்டு
வெண்ணிலவும் தேயும்
உன் பெயர் சொல்லி
நதிகள் ஓடும்
உன் தாய்மொழி கேட்க
பறவைகள் கூடும்
இயற்கையே காதலிக்கும்
ஓவியம் நீ!!
நீ கற்பனை என்றாலும்…
உன்னை வரைந்த ஓவியன் நான்
The masterpiece comes only from the master ;)
No comments:
Post a Comment