காதலை சொன்னதற்கா
என்னை காட்டிக்கொடுத்தாய்?
கண்ணாடி துண்டுகளாய்
நொறுங்கினேன்...
மூன்று மூச்சு விடுவதற்குள்!!
அடித்தது உன் அண்ணன்
என்பதால் விடவில்லை
உனக்கான நம் சொந்தம்
என்பதால் விட்டுவிட்டேன் .
கல் நெஞ்சம் உனக்கு
கல்லடிகள் எனக்கு :(
உனக்காக உயிர் பிரிந்தாலும்
உள்ளம் கலங்கேன் ..
உடல் சிதைவதற்க்கா
சிந்தை கலங்குவேன்?
நீ கண் சிமிட்டி
காட்டி கொடுத்தால்
தர்ம அடிகள் தூரமில்லை :)
நீ முத்தம் செய்து
காட்டி கொடுத்தால்
சிலுவையும் எனக்கு பாரமில்லை. !!
"I am what you scattered and the pieces you never gather up"
No comments:
Post a Comment