Pages

Wednesday, September 14, 2011

தாஜ்மஹால் எதுக்கு





















அடி தாஜ்மஹால் எதுக்கு
இப்போ சோகத்துல இருக்கு?
புதுசா ஒரு தாஜ்மஹால் 
நீயும் கேட்டுப்புட்ட உனக்கு.

ஒன்னு இல்ல ஐநூறு 
கட்டி தரத்தான்  ஆசை.
நச்சென்ற கண்கள்  முன்னே 
பொய்கள் எப்படி பேச.

மச்சான்கிட்ட காசு இல்ல 
அஞ்சு பைசா பேலண்சில்ல
சின்ன வீடா கட்டலாம்னா 
அதுக்கும் கூட வக்கில்ல.

தாலி மட்டும் கட்டுறேன்
உசுரையும்  சேத்து கொடுக்குறேன் 
காதல் சின்னம் வேணுமுன்னா 
முத்தம் ரெண்டு வைக்கிறேன் 

நூறு வருஷம் நமக்கு 
ஆயுள் காலம் இருக்கு 
என் உசுருள்ள உனக்கு 
அடி தாஜ்மஹால் எதுக்கு!!

No comments:

Post a Comment