பிறை தேடும் இரவிலே , உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் , உயிரே
அன்பே நீ வா...
பால் சிந்தும் பௌர்ணமியில்
நாம் நனைவோம் பனி இரவில்..
மாலை மங்கும் நேரம்
உன்னை பார்த்துக்கொண்டே நின்றாலும்
போதும் என்றே தோன்றும் ...
வானத்தில்
நீ வெண்ணிலா
ஏக்கத்தில்
நான் தேய்வதா ?
இப்போதே ...
என்னோடு...
வந்தாலென்ன ?
பாராமல் போன பௌர்ணமி எல்லாம்
பறித்து கொடுக்கும் ஒருவன் ...
கேளாமல் போன பாடலை எல்லாம்
திரட்டி கொடுக்கும் ஒருவன் ...
நான் தானா?..... ஐயோ நீ இல்லை ..
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞான ஓளி
நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவும்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி
நீ இன்றி நான் இருந்தால்
நிலவும் இருட்டு
என்னோடு நீ இருந்தால்
இருட்டும் நிலவு