Pages

Wednesday, July 27, 2011

விழிகளில் ஒரு வானவில்


விழிகளில் ஒரு வானவில் - சமீபத்தில் வெளிவந்த 'தெய்வத்திருமகள்' திரைப்படம் என்னுள் வரைந்த வானவில். ஆங்கிலத்தில் 'ஐ ஆம் சாம்' திரைப்படம் முன்பே பார்த்துவிட்டதால் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கம் சென்றேன்.  தெரிந்த கதையே என்றாலும் இத்திரைபடத்திற்கு  வலுவாய் துணை நின்றது விக்ரமின் நடிப்பும், பேபி சாரா வின் நடிப்பும் மட்டும் அல்ல ,  பாடல் வரிகளும் தான். இரவு நேர காட்சி என்றாலும், என் மனதில் வானவில்லாய்  பதிந்த பாடல் வரிகள்,  இங்கே தங்களின் பார்வைக்கும் ..


"உன்னை எண்ணி வாடுகிறேன் 
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன் 
அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன் 
அர்த்தமில்லா வாழ்க்கை இங்கு வாழ்கிறேன் 
- வெண்ணிலவே வெண்ணிலவே "

வெண்ணிலவை தொலைத்த  வென்மேகமாகிறார்  கதாநாயகன் விக்ரம் . மனைவியின் வாசம் தன்னோடு இருப்பதற்காக அவர் உபயோகித்த  சுவெட்டரை அணிந்து கொள்கிறார். அதனால் தான் பிற்பாதியில் சென்னை வந்தும் அதே உடையுடன் காணப்படுகிறார். 'சிங்கம்' சந்தானம் இரண்டு மணி நேரம் அந்த சுவேட்டரை கலட்ட முயற்சித்தும் விக்ரம் மறுக்கிறார் .

"முன்பு ஒரு சொந்தம் வந்து 
மழை ஆனதே 
மழை நின்று போனால் என்ன 
மரம் தூவுதே "
- ஆரிரோ ஆராரிரோ 

பிரிந்த மனைவியின் துயரத்தை நிலாவின் மழழை மழையில் மறக்கிறார் விக்ரம். இதே போன்ற வரிகள் காதல் கொண்டேன் (உன்னை தோழி என்பதா) மற்றும் ராமன் தேடிய சீதை(மழை நின்ற பின்பும் தூறல் போல) பாடல் வரிகளில் வந்தாலும், இத்திறைபடத்திற்கு இந்த வரிகள் பொருத்தமாகவே அமைந்துள்ளன.

நீ வந்தாய் என் வாழ்விலே 
பூ பூத்தாய் என் வேரிலே 
நாளையே நீ போகலாம் 
என் ஞாபகம் நீ ஆகலாம் 
தேர் போன பின்னாலே 
வீதி என்னாகுமோ ?? 

செடியை பூ பூக்க வைத்தாலும் வேர்கள் மண்ணுக்குள் மறையும் (உள்ளம் கொள்ளை போகுதே) . வேர்களின் நிகழ்வுகள் கண்களுக்கு தெரிவதே இல்லை. இங்கே நாயகன் மேல் வந்த அன்பினை வேரில் பூத்த பூவாக சொல்கிறார் அனுஷ்கா. இது இயற்க்கைக்கு எதிரானதும் அல்ல... புதிதானதும் அல்ல.


நான் உனக்காக பேசினேன் 
யார் எனக்காக பேசுவார் ??
மௌனமாய் நான் பேசினேன் ...

'உன்னை நான் அறிவேன் ... என்னை அன்றி யார் அறிவார்' - குணா பாடல் வரிகள் போல் மிகவும் ஆழமான வரிகள். பிரிந்த தந்தையையும் மகளையும் சேர்ப்பதற்காக போராடுகிறார் வழக்கறிஞர் அனுஷ்கா. பேச்சுத் திறமையில் சிறந்தவர்களை கூட 'யார் எனக்காக பேசுவார்' என ஏங்க வைப்பது காதலும் அதன் வலியும் மட்டும் தான்.

நான் நேசிக்கும் கண்ணீர்..... 
இவன் நெஞ்சில்!!
என் தேரில் பூத்த பூவிது 
என் நெஞ்சில் வாசம் வீசுது 
மனம் எங்கும் மணம்.

கண்ணீரை யாரும் நேசிப்பதில்லை. அது நெஞ்சத்தில் இருந்து வீழ்வதில்லை. 
தந்தையின் அன்பிற்காக எங்கும் நாயகியால் , மகளின் அன்புக்காக உருகும் நாயகனின் சோகத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ளுதலில் வரும் சோகமும் சுகமே, வலிகளும் வரமே.

No comments:

Post a Comment