Pages

Saturday, February 12, 2011

வாடி கருப்பட்டி


உருகி உருகி காதலிச்சும் 
ஏனோ உனக்கு புரியவில்ல 
இறுகிப்போன எனது நெஞ்சும் 
சொன்ன பேச்சு கேட்பதில்ல 

காதலிலே ஜெயிச்ச கூட்டம் 
உருப்பட்டதா செய்தி இல்ல 
உருப்படாத நாம மட்டும் 
காதலிச்சா தப்பே இல்ல 

காதல் கோவில் போகலாம் 
கல்யாண தீபம் ஏற்றலாம்
குழந்தைக்கு பள்ளிக்கூடம்  தேடலாம் 
வெள்ளி கொலுசு வாங்கலாம்

அச்சம், மடம், நாணம் 
நம் காதலுக்கு வேணாம் 
காசு, பணம், சோகம் 
நம் வாழ்க்கைக்கு வேணாம் 

மச்சுவீடும் கட்டி தாரேன் 
மதுரைக்கும் கூட்டி போறேன் 
அம்புட்டு தூரம் வேண்டாமுனா 
(வாடி.... கருப்பட்டி....)
காபி கிளப் போகலாம் :)

PS: This is not a love poem. But, it is a poem about love, written for the famous 'Karuppatti Kaappi Klub' - Dedicated to the founder Mr.Arun Priyan and Co-Founder Mr.Kumar alais Prakash

No comments:

Post a Comment