கண்கள் ஒரு நொடி பார் என்றது

ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்கு தான் என்றது

சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது

வேனா வேனா விழுந்திடுவேனா?
கண்கள் கண்டால் கவிழ்ந்திடுவேனா?

ஒரு ஆயிரம் கோடிகள் யுத்தங்கள்
சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட காயங்கள்
கண்டிட இதயம் நொறுங்குதே

ஒரு 500 நாள் ஆன தேன் ஆனது
அவள் செந்தூரம் சேர்கின்ற இதழ் ஆனது

அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதி தான்
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதி தான் !!

No comments:
Post a Comment