இன்னும் ஓர் இரவு
இன்னும் ஓர் நிலவு
இன்னும் ஓர் நினைவு
இதோ ... இதோ...
உயிருடன் இருப்பது இப்போதெல்லாம்
வலித்தால் மட்டுமே தெரியும்
உன்னுடன் நானும் இல்லை
என்பது விழித்தால் மட்டுமே புரியும்
நதியில் விழுந்த இலைகளுக்கு
மரங்கள் அழுவது கிடையாது
வேரில் தீயை வைக்கும் வரை
வேதனை அதற்கு புரியாது ..
பற பற பற பற பற பட்டாம் பூச்சி
தொட தொட தொட தொட பல வண்ணம் ஆச்சு
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்
அன்பே ....
மீன்கள் கானல் நீரில் தெரிவதுண்டோ ....?
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ?
மண்ணில் வீழ்ந்தும் ஒரு காயமின்றி
உருண்டோடும் நதி ஆகிட
இதோ... இதோ... இந்த பயணத்திலே ....
நான் கேட்க்கும் அழகான சங்கீதங்கள்
நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா?
No comments:
Post a Comment