உந்தன் பேச்சை கேட்கயிலே
கவலை நம்மை சில நேரம்
கூறு போட்டு கொண்டாடும்
தீயினை தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை
முடிவும் இல்லை
ஒரு மாலை நேரம்
வந்தது வந்தது பூங்காற்று
என் மனதின் ஓரம்
சென்றது சென்றது பூபோட்டு
எப்போது பூக்கள் பூக்கும்
புரியாதது
எப்போது காதல் தாக்கும்
தெரியாதது
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
வந்தது போனால் மறுபடி ஒன்று
புதியதாய் உருவாகும்