Pages

Monday, August 23, 2010

வானம் போலே உறவாகும்

கட்டி தங்கம் இவள் கன்னம்
தப்பித் தவறும் என் எண்ணம்
பழரசம் போல் இவள் சிரிப்பாள்
மின்சாரம் போல் என்னை இழுப்பாள்

இவள் மஞ்சள் நிற பூங்குயில்
செவ்விதழ் மை தீட்டிய வானவில்
தேனை சிந்தும் இவள் இதழ்
MADHUவை ஏந்தும் மலர் இவள்

மின்னல் வீசும் இவள் விழி
சொக்க வைக்கும் இவள் மொழி
வானம் போலே உறவுகள் - நிரந்தரம்
உயிரில் உணரும் அது SUDHANதிரம்

வரம் தந்தாள் ; அது வதை
சாபம் தந்தாள்; இவள் தேவதை
பாதைகள் இல்லை; அவள் பறந்தாள்
கனவுகள் இல்லை; அவள் மறைந்தாள்

இனி பிரிவிலும் நாட்கள் நகரும்
எந்த இழப்பிலும் இதயம் துடிக்கும்
அந்த நினைவினில் வலிகள் குறையும்
இந்த தேடலில் வாழ்க்கை முடியும்

A thing of beauty is joy forever. Life is beautiful

PS: இந்த கவிதை அன்பு நண்பர் நாவிஷ் செந்தில் குமார் மற்றும் 500 நாட்கள் கடந்த தம்பி பரமனுக்கும் ஒரு அர்ப்பணிப்பு :)

Sunday, August 15, 2010

காதல் லாரி - Haikko



காதல் ஒரு குப்பை என்றாள்
அவள் பெயரில் லாரி வந்தது
அவளை விட்டு அதினுடன் சென்றேன்.
குப்பை லாரியே மேல் என்று!! :)